< Back
மாநில செய்திகள்
பெரியநாயகி அம்மன் கோவிலில் விளக்குபூஜை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பெரியநாயகி அம்மன் கோவிலில் விளக்குபூஜை

தினத்தந்தி
|
18 July 2022 9:46 PM IST

தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் விளக்குபூஜை நடைபெற்றது.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி நேற்று முன்தினம் விளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்