< Back
மாநில செய்திகள்
வாடகை தர மறுத்ததால் வீட்டு உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

வாடகை தர மறுத்ததால் வீட்டு உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
23 Oct 2022 2:37 PM IST

வாடகை தர மறுத்ததால் மனமுடைந்த வீட்டு உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் ஊராட்சி வி.ஜி.கே.புரத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 55). இவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவருக்கு விமலா என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இவர் சென்னை பள்ளிக்கரணையில் தனக்கு சொந்தமாக உள்ள வீட்டை பிரசாந்த், வைஷ்ணவி என்ற தம்பதியினருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.

இந்த நிலையில் வைஷ்ணவி வீட்டு வாடகை தர மறுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் வேணுகோபால் புகார் அளித்த நிலையில், மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் வி.ஜி.கே.புரத்தில் அவர் வசிக்கும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேணுகோபாலின் மனைவி அளித்த புகாரின் பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்