< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
கடன் வாங்கி தருவதாக நில மோசடி
|8 Sept 2023 4:00 AM IST
ஓட்டல் உரிமையாளரிடம் கடன் வாங்கி தருவதாக நில மோசடி செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் ஆனந்தசுவாதிநகரை சேர்ந்தவர் சுகுமார். ஓட்டல் உரிமையாளர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுகுமாரிடம், கரூரை சேர்ந்த முனியப்பன், செல்வம் ஆகியோர் ரூ.5 கோடி கடன் பெற்று தருவதாக கூறினர். மேலும் கடன் பெறுவதற்கு சுகுமார் பெயரில் இருக்கும் நிலத்தை அவர்களின் பெயருக்கு எழுதி தரும்படி கேட்டுள்ளனர். இதையடுத்து சுகுமார் தனது நிலத்தை அவர்களுக்கு விற்பது போன்று எழுதி கொடுத்தார்.
ஆனால் பேசியபடி கடன் வாங்கி கொடுக்காமல், நிலத்தையும் ஏமாற்றி அபகரித்து கொண்டதாக கூறி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சுகுமார் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் முனியப்பன், செல்வம் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.