< Back
மாநில செய்திகள்
இடப்பிரச்சினை காரணமாக தகராறு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

இடப்பிரச்சினை காரணமாக தகராறு

தினத்தந்தி
|
1 Aug 2023 8:05 PM GMT

திருவிடைமருதூர் அருகே இடப்பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே உள்ள கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர் பாலு. இவருடைய மகன் முரளி( வயது30). தி.மு.க.வைச் சேர்ந்த இவர் பருத்திக்குடி ஊராட்சி துணைத் தலைவராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு சிலருக்கும் இடையே இடப்பிரச்சனை தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் முரளி தனக்கு சொந்தமான இடத்தில் வைக்கோல் கட்டுகளை இறக்கி உள்ளார். இதனைப் பார்த்த எதிர் தரப்பினரும் வைக்கோல் கட்டுகளை கொண்டு வந்து அந்த இடத்தில் இறக்கி உள்ளனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் காயமடைந்த முரளி அவரது தாய் சாந்தி அவரது மனைவி நிர்மலா ஆகிய 3 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதைப்போல அரசு போக்குவரத்து கழக டிரைவர் படைதலைவன் குடியைச் சேர்ந்த விஜயகுமார், கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் ஆகிய இருவரும் காயத்துடன் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது பற்றி முரளி மனைவி நிர்மலா கொடுத்த புகாரின் பேரிலும், படைதலைவன்குடி விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரிலும் திருவிடைமருதூர் போலீசார் தனித்தனியே வழக்கு பதிவு செய்து பருத்திகுடி ஊராட்சி துணைத் தலைவர் முரளி மற்றும் அவரது தந்தை பாலு ஆகிய இருவரையும் , படைத்தலைவன்குடி அரசு போக்குவரத்துக் கழக டிரைவர் விஜயகுமார் கோவில்பத்து சந்திரசேகரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்