< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு
|24 Aug 2023 6:40 PM IST
மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவருக்கு அப்பகுதியில் ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விட்டனர். இதுகுறித்து கீதா, சென்னை மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதில் கீதாவின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தது திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சுந்தர் (57) என்பது தெரியவந்தது. அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை தேடி வருகின்றனர்.