< Back
மாநில செய்திகள்
நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு மீது செப்.13ல் உத்தரவு
மாநில செய்திகள்

நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு மீது செப்.13ல் உத்தரவு

தினத்தந்தி
|
7 Sep 2022 11:08 AM GMT

நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு மீது செப்.13ல் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

சென்னை,

சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும் அவரது சகோதரர் மகேஷ்குமார் இருவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. அப்போது தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாக அமைச்சர் ஜெயக்குமார் மீது மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் கைதான ஜெயக்குமார் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் திருச்சியில் தங்கி இருந்து இருவாரங்களுக்கு கையெழுத்திட்டார். அதன் பிறகு சென்னையில் திங்கட்கிழமை தோறும் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட்டார்.

இதற்கிடையில், தன் மீது உள்ள நிலமோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனுதாக்கல் செய்தார்.

இந்த நிலையில், இந்த மனுவை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு மீது செப்.13-ந் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்