< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொடர்மழையால் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்... ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் மக்கள்..!
|16 Oct 2022 11:28 PM IST
எடப்பாடியில் தொடர்மழை காரணமாக, சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டம் எடப்பாடியில் தொடர்மழை காரணமாக, சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெரிய ஏரி நிரம்பி, தரைப்பாலங்களை மூழ்கடித்து தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
மேலும் அப்பகுதி மக்கள் ஆபத்தை உணராமல் தரைப் பாலத்தின் வழியாக கடந்து செல்வதோடு மீன்பிடித்தும் வருகின்றனர். மேலும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் எடப்பாடி நகராட்சி பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.