< Back
மாநில செய்திகள்
தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது
சிவகங்கை
மாநில செய்திகள்

தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது

தினத்தந்தி
|
5 Jan 2023 12:15 AM IST

பழையனூர் அருகே தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே உள்ளது பழையனூர். இங்கிருந்து ஓடாத்தூருக்கு செல்லும் வழியில் கிருதுமால் நதியின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. மழை காலங்களிலும், வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கும் காலங்களிலும் இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி கிருதுமால் நதி செல்லும். இதனால் பழையனூரை சுற்றி உள்ள 16-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பாதிக்கப்படுவார்கள. இந்த கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக இந்த கிருதுமால் நதி தரைப்பாலத்தை கடந்துதான் வாகனங்களிலும், நடந்தும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் இந்த கிராமங்களில் உள்ள மாணவ-மாணவிகள் பழையனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்குதான் படிக்க செல்ல வேண்டும்.

தற்போது கிருதுமால் நதியில் தண்ணீர் அதிகமாக செல்வதால் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வரும் அரசு டவுன் பஸ் மாற்று வழியில் ஓடாத்தூர் சென்று, அதே வழியில் திரும்பி பழையனூர் வந்து பின்பு மதுரை சென்றது. ெபாதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான கிருதுமால் நதியின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டினால் மட்டுமே 16 கிராம மக்களுக்கு போக்குவரத்துக்கும், பிற தேவைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்