ராமநாதபுரம்
ரூ.55 கோடி மதிப்பிலான நகராட்சி நிலங்கள் மீட்பு
|ராமநாதபுரம் நகரில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.55 கோடி மதிப்பிலான நகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன
ராமநாதபுரம் நகரில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.55 கோடி மதிப்பிலான நகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன.
பாரபட்சம்
ராமநாதபுரம் நகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் அதனை பாரபட்சமின்றி மீட்க வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக ராமநாதபுரம் புதிய பஸ்நிலையம் எதிரில் அம்மா உணவகத்தின் அருகே நகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் பல ஆண்டு காலமாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன.
ரூ.50 கோடி மதிப்பிலான 81 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப ்பட்டு இருந்தது. இந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விரைந்து விசாரித்து தற்போது நகரசபைக்கு ஆதரவாக தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின்படி மேற்கண்ட ஆக்கிரமிப்பு நிலங்களில் இருந்தவர்களிடம் முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.
காலக்கெடு
இந்நிலையில் நேற்று காலக்கெடு முடிவடைந்ததை தொடர்ந்து நகரசபை நிர்வாகத்தின் சார்பில் ஜேசிபி எந்திரங்கள் மூலம் மேற்கண்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டன. ஆணையாளர் (பொறுப்பு) லட்சுமணன் தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர் ராஜ்குமார், நகராட்சி என்ஜினீயர் சுரேந்திரன் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்புகளை போலீசார் உதவியுடன் அகற்றி மீட்டனர். இதன்மூலம் நகரசபைக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு உள்ளது.
இதேபோல, ராமநாதபுரம் நகரில் அக்ரகாரம், அகில்கிடங்கு மூங்கில் தெரு பகுதியில் மழைநீர் செல்லும் கால்வாய் 10 சென்ட் நிலம் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ.5 கோடி ஆகும். மேற்கண்ட ஆக்கிரமிப்பு காரண மாக மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நின்று வந்தது. இந்த ஆக்கிரமிப்பினை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
மீட்பு
போலீசார் உதவியுடன் நகராட்சிக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது. நகராட்சி தலைவர் கார்மேகத்தின் தீவிர முயற்சியால் நகரசபைக்கு சொந்தமான ரூ.55 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது.