< Back
மாநில செய்திகள்
குப்பைகளை கொட்ட 6 ஏக்கர் நிலம் ஒதுக்கி தரவேண்டும்
சிவகங்கை
மாநில செய்திகள்

குப்பைகளை கொட்ட 6 ஏக்கர் நிலம் ஒதுக்கி தரவேண்டும்

தினத்தந்தி
|
12 Jun 2022 12:51 AM IST

சிவகங்கை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட 6 ஏக்கர் நிலம் ஒதுக்கி தரவேண்டும் என்று நகரசபை தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட 6 ஏக்கர் நிலம் ஒதுக்கி தரவேண்டும் என்று நகரசபை தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனு

சிவகங்கை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வைத்து, உரம் தயாரிக்க 6 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோருக்கு சிவகங்கை நகராட்சித் தலைவர் துரைஆனந்த் மனு அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை நகரில் உள்ள 27 வார்டுகளிலும் சேர்த்து தினமும் 11 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகளை கொட்ட நகராட்சிக்கு சொந்தமாக சுந்தரநடப்பு என்ற இடத்தில் உள்ள குப்பை கிடங்கை, அந்த பகுதி மக்கள் எதிர்ப்பால் பயன்படுத்த முடியவில்லை.

மேலும் குப்பைகளை கொட்டி வைத்து, உரம் தயாரிக்க நகருக்கு வெளியே நகராட்சிக்கு சொந்தமான இடம் இல்லை. தற்போது மக்கள் குடியிருப்பு பகுதியையொட்டி மருது பாண்டியர் நகர், மானாமதுரை ரோடு தெற்கு மயானம், காளவாசல் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டி உரம் தயாரிக்கப்படுகின்றன.

பாதிப்பு

மேலும் சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே தெற்கு மயானத்தில் கொட்டப்படும் குப்பைக்கு சமூக விரோதிகள் அடிக்கடி தீ வைத்துவிடுகின்றனர். இந்த புகை மூட்டத்தால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், நகர மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே நகருக்கு வெளியே மக்களை பாதிக்காத வகையில் குப்பைகளை கொட்டி வைத்து, உரம் தயாரிக்கும் வகையில் நகராட்சிக்கு 6 ஏக்கர் நிலம் ஒதுக்கி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்