< Back
மாநில செய்திகள்
ரூ.21¾ கோடி மதிப்புள்ள 21 ஏக்கர் நிலம் மீட்பு
மதுரை
மாநில செய்திகள்

ரூ.21¾ கோடி மதிப்புள்ள 21 ஏக்கர் நிலம் மீட்பு

தினத்தந்தி
|
25 May 2022 3:02 AM IST

ரூ.21¾ கோடி மதிப்புள்ள 21 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

மதுரை,

மதுரை பொன்மேனி தானத்தவம் கிராமத்தில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அதனை கோவில் நிர்வாகம் கண்டுபிடித்து அங்கிருந்த அக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றியது. இவ்வாறு அந்த பகுதியில் மொத்தம் 21.46 ஏக்கர் நிலங்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அதனை வருவாய்த்துறையினர் முன்னிலையில் கோவில் உதவி கமிஷனர் மற்றும் ஊழியர்கள் சார்பில் அந்த இடத்தை நேற்று அளவீடு செய்து மீட்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் மீனாட்சி அம்மன்கோவிலுக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை ஊன்றப்பட்டது. இதன் மூலம் அந்த பகுதியில் சுமார் ரூ.21.46 கோடி மதிப்புள்ள இடம் மீட்கப்பட்டுஉள்ளது.

மேலும் செய்திகள்