< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் விளக்கு பூஜை
|4 Jan 2023 12:15 AM IST
கம்பம் வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் மகத்துவம் நிறைந்தது ஆகும். கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை பாடுவதும், கேட்பதும் புண்ணியம் ஆகும். மேலும் இந்த மாதம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி, கம்பம் வேணுகோபாலகிருஷ்ணன் கோவிலில் திருப்பாவை பாசுரத்தின் படி ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று மார்கழி 19-ம் நாள் பாசுரத்தின் படி யதுகுலவல்லி நாச்சியாருக்கு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்பட்டன. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். அதன்பிறகு தீபாராதனை நடைபெற்று வளையல், மஞ்சள் கயிறு பிரசாதம் வழங்கப்பட்டது.