< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
|12 Aug 2022 1:30 AM IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
சமயபுரம்:
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் 108 பெண்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி உற்சவர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பித்தளை காமாட்சி அம்மன் விளக்கு, பூஜைக்கான பொருட்கள், புடவை உள்பட 22 பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உள்துறை கண்காணிப்பாளர் அழகர்சாமி, மணியக்காரர் பழனிவேல் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.