பெரம்பலூர்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா
|சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா தொடங்கியது.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் 41-வது ஆண்டு லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி உற்சவ அம்மனுக்கு நேற்று முன்தினம் மதுரகாளியம்மன் அலங்காரம் நடந்தது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மதுரை மீனாட்சி அலங்காரமும், இன்று (புதன்கிழமை) காமாட்சி அலங்காரமும் நடக்கிறது.
நாளை (வியாழக்கிழமை) ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 30-ந்தேதி துர்க்கை அலங்காரமும் நடக்கிறது. அக்டோபர் மாதம் 1-ந் தேதி கருமாரியம்மன் அலங்காரமும், 2-ந் தேதி மாரியம்மன் அலங்காரமும், 3-ந் தேதி லட்சுமி அலங்காரமும் நடக்கிறது.
இதையடுத்து, 4-ந்தேதி சரஸ்வதி அலங்காரமும், 5-ந்தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து அம்மன் புறப்பாடு மற்றும் அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் லட்சார்ச்சனை விழா நிறைவடைகிறது. நவராத்திரியின் அனைத்து நாட்களிலும் தினமும் மாலை 4 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கி இரவு 7 மணிவரை நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு உற்சவர் மண்டகப்படி நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.