< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
கஸ்தூரி ரங்க பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை
|22 March 2023 12:15 AM IST
விளக்குடி கஸ்தூரி ரங்க பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை
வடுவூர்:
திருவாரூர் மாவட்டம், விளக்குடி கஸ்தூரி ரங்க பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. முன்னதாக லட்சார்ச்சனையின் ஒரு பகுதியாக உற்சவர் ராஜகோபால சாமியை கருட வாகனத்தில் எழுந்தருள செய்தனர். அப்போது சாமிக்கு வேதபாராயணங்கள் பாடியபடி லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து மூலவர் தாயார்கள் சமேத கஸ்தூரி ரங்க பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல தனி சன்னதியில் அருள்பாலிக்கும் செங்கமலத்தாயார், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு மலர்களை கொண்டு லட்சார்ச்சனை செய்யப்பட்டது.