< Back
மாநில செய்திகள்
லட்சக்கணக்கில் நாகைக்கு படையெடுத்த வெளிநாட்டு பறவைகள்.. மனதை மயக்கும் ரம்மியமான காட்சி..!
மாநில செய்திகள்

லட்சக்கணக்கில் நாகைக்கு படையெடுத்த வெளிநாட்டு பறவைகள்.. மனதை மயக்கும் ரம்மியமான காட்சி..!

தினத்தந்தி
|
17 Nov 2023 8:59 PM IST

பருவமழை பொழிந்து இனப்பெருக்கம் செய்ய சாதகமான சூழல் நிலவுவதால் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.

கோடியக்கரை,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன.

கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி உள்ளதால் பூநாரை, கரண்டி மூக்குநாரை, பட்டாணி உள்ளான், கொசு உள்ளான், கடற்காகம் ஆகியவை படையெடுத்துள்ளன. பருவமழை பொழிந்து இனப்பெருக்கம் செய்ய சாதகமான சூழல் நிலவுவதால் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்