திருவாரூர்
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
|கூத்தாநல்லூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை ெசய்து கொண்டார். இதுதொடர்பாக காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூத்தாநல்லூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை ெசய்து கொண்டார். இதுதொடர்பாக காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதலித்து வந்தனர்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பழையனூர் அழகியநாதன்கோம்பூர் கீழத்தெருவை சேர்ந்தவர் நாகூரான். இவருடைய மகள் அபிராமி(வயது 22). மன்னார்குடி பைங்காட்டூர் வடக்கு தெருவை சேர்ந்த ராதா மகன் அஜித்குமார்(23). அஜித்குமாரின் அக்கா, அழகியநாதன்கோம்பூரில் திருமணமாகி வசித்து வருகிறார். இதனால் அடிக்கடி அக்கா வீட்டுக்கு அஜித்குமார் வந்து செல்லும்போது, அபிராமியுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
தீக்குளிப்பு
காதலர்கள் இருவரும் தங்களுடைய பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அபிராமி திடீரென தனது வீட்டில் இருந்த மண் எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதை பார்த்து பதறிப்போன அக்கம், பக்கத்தினர் ஓடிச்சென்று தீயை அணைத்தனர். இதில் உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த அபிராமியை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அபிராமி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அபிராமியின் அண்ணன் விக்னேஷ்(25) வடபாதிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் விசாரணை
அதில் தனது தங்கை அபிராமி சாவில் மர்மம் இருப்பதாகவும், தனது தங்கை தற்கொலைக்கு முயற்சி செய்வதற்கு முன்பாக அஜித்குமாரிடம் செல்போனில் பேசியதாகவும், அதனால் அஜித்குமாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.