< Back
மாநில செய்திகள்
கொலை செய்யப்பட்ட கார் டிரைவர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கொலை செய்யப்பட்ட கார் டிரைவர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
4 Jun 2022 11:40 PM IST

கும்பகோணத்தில், கொலை செய்யப்பட்ட கார் டிரைவர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கும்பகோணம்:-

கும்பகோணத்தில், கொலை செய்யப்பட்ட கார் டிரைவர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கார் டிரைவர் கொலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவிரி பெருமாண்டி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகன் தினகரன்(வயது 27). கார் டிரைவரான இவர், கடந்த மாதம்(மே) 31-ந் தேதி பெருமாண்டி, பத்மநாதபுரம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு போலீசார், தினகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

மேலும் ஒருவர் கைது

இதுதொடர்பாக 6 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இதில் மேலக்காவேரியை சேர்ந்த கர்ணன் மகன் தீனதயாளன்(28) என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மனைவி தற்கொலை

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட தினகரன் மனைவி செல்வகுமாரி(28) தனது வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தினகரன் கொலை செய்யப்பட்ட அன்றே துக்கம் தாங்காமல் செல்வகுமாரி தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது உறவினர்கள் செல்வகுமாரியை காப்பாற்றி ஆறுதல் கூறி வந்தனர்.

ஆனாலும் தொடர்ந்து சோகத்திலேயே இருந்து வந்த செல்வகுமாரி, கணவர் இல்லாமல் தனக்கு வாழ மனமில்லை என கூறி வந்தார். இந்த நிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் கொலை செய்யப்பட்ட நிலையில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்