< Back
மாநில செய்திகள்
திருவாரூர் கிராம நிர்வாக அதிகாரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
திருவாரூர்
மாநில செய்திகள்

திருவாரூர் கிராம நிர்வாக அதிகாரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
28 May 2022 5:41 PM GMT

திருவாரூர் அருகே திருமணமான 7 மாதங்களில் திருவாரூர் கிராம நிர்வாக அதிகாரியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

திருவாரூர்:-

திருவாரூர் அருகே திருமணமான 7 மாதங்களில் திருவாரூர் கிராம நிர்வாக அதிகாரியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கிராம நிர்வாக அதிகாரி

பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சக்திவேல்(வயது 28). இவர். திருவாரூர் வடக்கு சேத்தி பகுதி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி அரியலூர் மாவட்டம் நமங்குணத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் தமிழ்லட்சுமி(20). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு(2021) நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.

தூக்குப்போட்டு தற்கொலை

திருமணத்திற்கு பின்னர் இவர்கள் திருவாரூர் அருகே காட்டூர் முதலியார் தெருவில் தனி வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று தமிழ்லட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வரதட்சணை கொடுமை என புகார்

இதுகுறித்து தமிழ்லட்சுமியின் தந்ைத கோவிந்தராஜ், திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், வரதட்சணை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் தனது மகள் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி உள்ளார்.

அதன்பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தமிழ்லட்சுமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

தமிழ்லட்சுமிக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் வரதட்சணை கொடுமை காரணமாக அவர் இறந்தாரா? என்பது குறித்து திருவாரூர் உதவி கலெக்டர் பாலச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணமான 7 மாதங்களில் கிராம நிர்வாக அதிகாரியின் மனைவி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்