தஞ்சாவூர்
வீட்டுக்குள் பிணமாக கிடந்த பெண்
|பட்டுக்கோட்டை அருகே பெண் ஒருவர் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டுக்கோட்டை அருகே பெண் ஒருவர் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திடீர் சத்தம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி தென்பாதி தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது40). கார் டிரைவர். இவருடைய மனைவி பிரியா (30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அவருடைய வீட்டுக்குள் திடீரென சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர்.
போலீசார் விசாரணை
அப்போது பிரியா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிரியாவின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பிரியாவின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில் பிரியா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறி உள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியா எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.