தஞ்சாவூர்
மகன் கண் முன்னே நடந்த விபத்தில் பெண் சாவு
|கும்பகோணம் அருகே மகனுடன் கோவிலுக்கு சென்று திரும்பியபோது நடந்த விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.
கும்பகோணம் அருகே மகனுடன் கோவிலுக்கு சென்று திரும்பியபோது நடந்த விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.
கோவிலில் சாமி தரிசனம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மானம்பாடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஜெயவீரன் மனைவி தனலட்சுமி (வயது65). இவருடைய மகன் ராஜேஷ் (45). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு பட்டீஸ்வரத்தில் இருந்து கும்பகோணத்துக்கு மோட்டார் சைக்கிளில் திரும்ப வந்து கொண்டிருந்தனர்.
விபத்தில் பலி
தாராசுரம் ரெயில்வே கேட் அருகே அடையாளம் தெரியாத ஒருவர் வந்த மோட்டார் சைக்கிள், தனலட்சுமி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் படுகாயம் அடைந்த தனலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவிலுக்கு சென்று திரும்பியபோது மகன் கண் முன்னே நடந்த விபத்தில் பெண் இறந்தது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.