< Back
மாநில செய்திகள்
பெண்கள் முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இல்லை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பெண்கள் முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இல்லை

தினத்தந்தி
|
9 July 2022 10:35 PM IST

பெண்கள் முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பேசினார்.

பரமக்குடி,

பெண்கள் முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பேசினார்.

விழிப்புணர்வு முகாம்

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு பள்ளியின் சேர்மன் ராகா சரவணன் தலைமை தாங்கினார். லயன்ஸ் வட்டார தலைவர் முகமது உமர், பரமக்குடி அரிமா சங்க தலைவர் வக்கீல் தினகரன், பொரு ளாளர் ஆடிட்டர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஆனந்தி கலந்துகொண்டு மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மற்ற மாநிலங்களைவிட தமிழ் நாட்டில் பாலியல் குற்றங்கள் குறித்த புகார்கள் குறைவாகவே உள்ளன. போக்சோ சட்டத்தின் கீழ் புகார் கொடுத்த உடனே அந்த புகார் உண்மையானதா என்பது குறித்து ஆராய்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் நீதிமன்றத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

அனைத்து பள்ளிகளிலும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த குழுக்களின் மூலம் மாணவ-மாணவிகளுக்கு போக்சோ குறிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. காவல் துறையினரின் நடவடிக்கைகளால் போக்சோ குற்றங்கள் குறைந்து வருகிறது.

தடை இல்லை

குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கு இந்த காலத்தில் எந்த தடையும் இல்லை. அனைத்து துறையிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். அதேபோல் மாணவிகளும் நன்றாக படித்து உயர வேண்டும் என்றார். இதில் அரிமா சங்க நிர்வாகிகள் தமிழரசன், இளங்குமரன், மோகன் உள்பட பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் சோபனா தேவி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்