< Back
மாநில செய்திகள்
லாடபுரம் பெரிய மாரியம்மன் கோவில் தேரோட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

லாடபுரம் பெரிய மாரியம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
15 Jun 2022 11:20 PM IST

லாடபுரம் பெரிய மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூரை அடுத்த லாடபுரத்தில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வைகாசி திருவிழா கடந்த மே மாதம் 29-ந்தேதி கிராம பூ போடுதலும், கடந்த 5-ந்தேதி மறுபூ போடுதல் நிகழ்ச்சி மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து சிம்ம, அன்ன வாகனங்களில் அம்மன் திருவீதியுலா, 12-ந்தேதி மாவிளக்கு பூஜை, ரத வாகனங்களில் அம்மன் புறப்பாடு, 13-ந்தேதி அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், இரவில் குதிரை வாகனத்தில் பவனி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ மாரியம்மன் எழுந்தருளினார். இதில் லாடபுரம், மேலப்புலியூர், அம்மாபாளையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேருக்கு சீர்கொடுத்து அம்மனை வழிபட்டு சென்றனர். மஞ்சள்நீராட்டு விழா நேற்று நடந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) பெரிய மாரியம்மனுக்கு பொங்கல் விழாவும், மாவிளக்கு பூஜையும் நடக்கிறது.

மேலும் செய்திகள்