< Back
மாநில செய்திகள்
தர்மபுரி நகராட்சி சார்பில்மே தின விழா
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி நகராட்சி சார்பில்மே தின விழா

தினத்தந்தி
|
2 May 2023 12:30 AM IST

தர்மபுரி நகராட்சி சார்பில் மே தின விழா தர்மபுரி கே.பி.ஜே. தங்கமணி திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை என்கிற புவனேஸ்வரன் முன்னிலை வகித்தார். விழாவையொட்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இனிப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. மேலும் தொழிலாளர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. இதில் நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம், சுகாதார ஆய்வாளர்கள் சுசீந்திரன், கோவிந்தராஜன், நகராட்சி வருவாய் ஆய்வாளர் மாதையன், மேலாளர் முத்துக்குமார், நகராட்சி கவுன்சிலர்கள் சத்யா முல்லைவேந்தன், செல்வி சுருளிராஜன், பாலசுப்பிரமணியன், ஜெகன், வாசுதேவன், புவனேஸ்வரன், மாதேஸ்வரன், சம்பந்தம், சமயா ராஜா, சின்ன பாப்பா மாதேஷ், கவிதா யுவராஜ், விஜயலட்சுமி உமா சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்