< Back
மாநில செய்திகள்
சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது

தினத்தந்தி
|
2 Dec 2022 1:55 AM IST

சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை சேர்ந்தவர் வசந்தன் (வயது 22), கூலி தொழிலாளி. இவர் 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஜெயமங்களம் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, சிறுமியை திருமணம் செய்த வசந்தன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் கொளஞ்சியம்மாள் மீது வழக்குப்பதிவு செய்தார். மேலும், வசந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்