< Back
மாநில செய்திகள்
பட்டாபிராமில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி; பழைய வீட்டை இடிக்கும்போது பரிதாபம்
சென்னை
மாநில செய்திகள்

பட்டாபிராமில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி; பழைய வீட்டை இடிக்கும்போது பரிதாபம்

தினத்தந்தி
|
6 March 2023 10:29 AM IST

பழைய வீட்டை இடிக்கும்போது சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் பட்டாபிராமில் சோகத்தை ஏற்படுத்தியது.

கட்டிட தொழிலாளி

ஆவடியை அடுத்த பட்டாபிராம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 55), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி பானு (49). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.பட்டாபிராம் உழைப்பாளர் நகர் 2-வது தெருவில் பழைய வீட்டை இடிக்கும் பணியில் சேகர் மற்றும் அவருடன் மற்றொரு தொழிலாளி ஆகிய இருவரும் ஈடுபட்டிருந்தனர்.

சுவர் இடிந்து விழுந்து சாவு

நேற்று மதியம் 1 மணியளவில் வீட்டின் மேற்கூரையை இடிக்கும் பணியில் இருவரும் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சுமார் 5 அடி நீளமுள்ள அந்த வீட்டின் சுவர் இடிந்து அருகில் இருந்த சேகர் மீது விழுந்தது. உடனிருந்த மற்றொரு தொழிலாளி, அங்கிருந்து எகிறி குதித்து தப்பி ஓடி உயிர் தப்பினார்.

இதில் படுகாயம் அடைந்த சேகர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பட்டாபிராம் போலீசார், பலியான சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்