< Back
மாநில செய்திகள்
வந்தவாசியில் லாரி மோதி தொழிலாளி பலி
வேலூர்
மாநில செய்திகள்

வந்தவாசியில் லாரி மோதி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
23 Nov 2022 5:01 PM IST

வந்தவாசியில் லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 37), தொழிலாளி. இவர், இருசக்கர வாகனத்தில் ஆரணி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த லாரி திடீரென இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சசிகுமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனே டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான சசிகுமாருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்