< Back
தமிழக செய்திகள்
லாரி மோதி கூலி தொழிலாளி பலி; டிரைவர் கைது
அரியலூர்
தமிழக செய்திகள்

லாரி மோதி கூலி தொழிலாளி பலி; டிரைவர் கைது

தினத்தந்தி
|
3 April 2023 12:16 AM IST

உடையார்பாளையம் அருகே குலதெய்வ கோவிலுக்கு சென்றபோது லாரி மோதி கூலி தொழிலாளி பலியானார். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள இடையார்ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வநாதன் மகன் பிரகாஷ்(வயது 23). தச்சு வேலை செய்து வந்தார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் செதலவாடி கிராமத்தில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். உடையார்பாளையம்-இரும்புலிக்குறிச்சி சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் காலனி தெருவை சேர்ந்த மணி மகன் மணிகண்டன்(30) என்பவர் ஓட்டி வந்த லாரி பிரகாஷ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

பலி

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பிரகாஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தந்தை செல்வநாதன் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் லாரி டிரைவர் மணிகண்டன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

மேலும் செய்திகள்