< Back
மாநில செய்திகள்
லாரி மோதி தொழிலாளி சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

லாரி மோதி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
16 Oct 2022 1:01 AM IST

பள்ளிபாளையத்தில் லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் 5 பனை தோகவுண்டம் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை மாநிலத்தை சேர்ந்த லகான் பஸ்ரான் (வயது 50) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு லகான் பஸ்ரான் தோகவுண்டம்பாளையம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்து அவர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் ராஜ்குமார் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்