< Back
மாநில செய்திகள்
கார் மோதி கூலித்தொழிலாளி சாவு
திருச்சி
மாநில செய்திகள்

கார் மோதி கூலித்தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
21 Aug 2022 12:31 AM IST

கார் மோதி கூலித்தொழிலாளி இறந்தார்

சமயபுரம், ஆக.21-

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி புதுதெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). கூலித்தொழிலாளியான இவர் நேற்று திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள பள்ளி விடை பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் கண்ணன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த பாஸ்கர் (32) என்பவரை கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்