< Back
மாநில செய்திகள்
மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
5 Oct 2023 1:01 AM IST

மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி காளீஸ்வரி (வயது 60). இவர், கடந்த 2014-ம் ஆண்டு பாப்பம்பட்டியில் உள்ள ரீச்வாய்க்கால் பகுதியில் நடந்து வந்த போது, அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான பாலன் என்ற பாலுச்சாமி (34), காளீஸ்வரியை கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் கத்தியால் காளீஸ்வரியை தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலன் என்ற பாலுச்சாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்த நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு பழனி சப்-கோர்ட்டில் நடந்து வந்தது. பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை நேற்று நிறைவடைந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட பாலுச்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயசுதாகர் தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்