திருவள்ளூர்
ஆவடி அருகே குடும்பத் தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
|ஆவடி அருகே குடும்பத் தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி தற்கொலை
ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 43). கூலி தொழிலாளி. இவர் வங்கி கணக்கில் இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்து செலவழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி மங்கையர்க்கரசி கார்த்திக்கிடம் கேட்டுள்ளார். இதில் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மணமுடைந்த கார்த்திக் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்ட பின்னர் படுக்கையறைக்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று காலை மங்கையர்கரசி எழுந்து பார்த்தபோது கார்த்திக் படுக்கையறையில் மின்விசிறியில் தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற பட்டாபிராம் போலீசார் உயிரிழந்த கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல் குமார் (21). இவர், பட்டாபிராம் தென்றல் நகரில் தங்கி, கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று காலை இவர் வீட்டின் மாடிக்கு சென்று சுற்றுச்சுவர் மீது அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்த ராகுல்குமார் கட்டிடத்தை ஒட்டிச்சென்ற மின்கம்பியில் விழுந்தார். இதில் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த ராகுல் குமார் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.