< Back
மாநில செய்திகள்
சின்னசேலம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சின்னசேலம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
22 April 2023 12:15 AM IST

சின்னசேலம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிாிழந்தாா்.

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே கனியாமூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன் (வயது 56). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாடு மேய்க்க சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றிற்கு அருகே சின்னையனின் காலணி மற்றும் உடைகள் இருந்தது. இதனால் அவர் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகமடைந்த உறவினர்கள், இதுபற்றி, தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சின்னசேலம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையிலான வீரர்கள் மற்றும் சின்னசேலம் போலீசார் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி பார்த்தனர். அப்போது சின்னையன் கிணற்றுக்குள் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்