< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி கூலித்தொழிலாளி பலி
|2 Oct 2023 4:15 PM IST
சைதாப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி கூலித்தொழிலாளி பலியானார்.
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் முத்து (வயது 55). இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். முத்து, அங்குள்ள ஒரு ஓட்டலில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் முத்துவிற்கு பெரும்பாக்கம் பகுதியில் வீடு வழங்கினர். அவருடைய மனைவி, மகள், மகன் மட்டும் அந்த வீட்டில் வசித்து வந்தனர். இவர், சைதாப்பேட்டையில் உள்ள குடிசையில் தங்கி வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை முடிந்து குடிசைக்கு திரும்பினார். இதற்காக சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மாம்பலம் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.