< Back
மாநில செய்திகள்
அரசு பஸ் மோதி கூலி தொழிலாளி சாவு
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

அரசு பஸ் மோதி கூலி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
27 Jan 2023 3:52 PM IST

தேசூர் அருகே அரசு பஸ் மோதி கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 33), கூலி தொழிலாளி.

இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார். மேலும் தற்போது மகேஸ்வரி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் பாண்டியன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு நேற்று இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது செஞ்சியில் இருந்து தேசூர் நோக்கி சென்ற அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேசூர் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்