< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
பாலத்தில் இருந்து தவறி விழுந்து கூலித்தொழிலாளி சாவு
|7 April 2023 12:15 AM IST
பாண்டமங்கலம் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து கூலித்தொழிலாளி இறந்தார்.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் தாலுகா, வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 43). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று முன்தினம் இரவு பாண்டமங்கலம் அருகே கபிலர்மலையிலிருந்து உரம்பூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு பாலத்தில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் தவறி பாலத்தில் இருந்து தவறி விழுந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.