< Back
மாநில செய்திகள்
கூலித்தொழிலாளி சாவு
தேனி
மாநில செய்திகள்

கூலித்தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
14 Dec 2022 12:30 AM IST

தேவதானப்பட்டி அருகே அய்யப்ப பக்தர்கள் சென்ற கார் மோதி கூலித்தொழிலாளி இறந்தார்.

தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 60). கூலித்தொழிலாளி. இவரது நண்பர் அதே ஊரை சேர்ந்த இளங்கோவன் (55). நேற்று இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தேவதானப்பட்டி பைபாஸ் சாலையில் உள்ள டீக்கடைக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை துரைராஜ் ஓட்டினார். தேவதானப்பட்டி பைபாஸ் சாலை டி.வாடிப்பட்டி பிரிவு அருகே வந்தபோது கேரள மாநிலம் சபரிமலையில் இருந்து கடலூருக்கு சென்ற அய்யப்ப பக்தர்களின் கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த துரைராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயம் அடைந்த இளங்கோவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். காரில் வந்த அய்யப்ப பக்தர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் கடலூர் மாவட்டம் பி.என்.பாளையத்தை சேர்ந்த ஜானகிராமன் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்