< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் கூலித்தொழிலாளி சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் கூலித்தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
26 Oct 2022 1:05 AM IST

பரமத்திவேலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கூலித்தொழிலாளி இறந்தார்.

பரமத்திவேலூர்

பரமத்தி வேலூர் அருகே உள்ள வெங்கரை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் மோகன்குமார் (வயது 33). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 12-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் கொளக்காட்டுபுதூர் சென்று உள்ளார். பின்னர் வீட்டுக்கு செல்ல கொளக்காட்டுப்புதூரில் இருந்து வெங்கரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்தநிலையில் வெங்கரை அருகே உள்ள இரட்டை புளியமரம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து மோகன்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் மோகன்குமாரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மோகன்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்