< Back
மாநில செய்திகள்
விபத்தில் கூலித்தொழிலாளி சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

விபத்தில் கூலித்தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
10 Sept 2022 12:51 AM IST

நாமக்கல் அருகே விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல் அருகே உள்ள தும்மங்குறிச்சியை சேர்ந்தவர் ராஜீ (வயது 60). கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை வழக்கம்போல் கூலி வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் நாமக்கல் நோக்கி சென்றார். அப்போது சின்ன அய்யம்பாளையம் அருகே சென்றபோது, அவரது மோட்டார் சைக்கிள் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளனது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜீ படுகாயம் அடைந்தார். அப்போது அந்த வழியாக வந்த நாமக்கல் எம்‌.எல்.ஏ. ராமலிங்கம், ராஜீயை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்