< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
கூலித்தொழிலாளி சாவு
|19 Oct 2023 1:15 AM IST
மோட்டார் சைக்கிள்-மொபட் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
கிணத்துக்கடவு அருகே மன்றாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது 61). இவர் சம்பவதன்று தனது நண்பரான அக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த நந்தகோபால்(60) என்பவரை தனது மொபட்டில் ஏற்றிக்கொண்டு பனப்பட்டியில் இருந்து வடவள்ளி செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக அக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேஷ்(35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென மொபட் மீது மோதியது. இதில் 3 பேரும் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தனர். மேலும் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நந்தகோபால், முருகேசன் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.