< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் மோதல் கூலி தொழிலாளி சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல் கூலி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
8 Aug 2023 12:45 AM IST

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ராஜாக்கமங்கலம்:

வெள்ளிச்சந்தை அருகே உள்ள திருநயினார்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வில்லியம் (வயது 48), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் அம்மாண்டிவிளையில் இருந்து ஆலங்கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார்சைக்கிள் கல்லுக்கட்டி அருகே செல்லும் போது, எதிரே அம்மாண்டிவிளை திவண்டாகோட்டையை சேர்ந்த சோமன் (42) என்பவர் இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். வில்லியம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் வில்லியம் பரிதாபமாக இறந்தார். விபத்தில் காயம் அடைந்த சோமன் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து வில்லியமின் மனைவி மார்கிரேட் மேரி ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

---

மேலும் செய்திகள்