அரியலூர்
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
|பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 23), கூலி தொழிலாளி. இவர் 16 வயதான பிளஸ்-2 மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், அந்த மாணவி கர்ப்பமானதால் அவரது பெற்றோர் அவரை வெறுத்து ஒதுக்கி உள்ளனர். இதையடுத்து, நிறைமாத கர்ப்பிணியான மாணவி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் அவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மாணவிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனைதொடர்ந்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, மாணவியை கர்ப்பமாக்கிய அஜித்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.