< Back
மாநில செய்திகள்
மொபட்டில் மதுபாட்டில்கள் கடத்திய கூலித்தொழிலாளி கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

மொபட்டில் மதுபாட்டில்கள் கடத்திய கூலித்தொழிலாளி கைது

தினத்தந்தி
|
7 Aug 2023 12:15 AM IST

ராசிபுரம் அருகே மொபட்டில் மதுபாட்டில்கள் கடத்திய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ராசிபுரம்

கூலித்தொழிலாளி

ராசிபுரம் போலீசார் நேற்று சட்ட விரோதமாக மதுவிற்பனை நடைபெறுகிறதா என புதுப்பாளையம் ஏரி பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது ஒருவர் மொபட்டில் மூட்டைகளோடு சென்றதைக் கண்டு போலீசார் அவரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது மொபட்டில் இருந்து சாக்கு மூட்டைகளில் மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் அவர், ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் சவுந்திரராஜன் (வயது 58) என்பதும், இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் சவுந்திரராஜன் சட்ட விரோதமாக ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள அரசு மதுபான கடைகளில் மதுபாட்டில்களை விலைக்கு வாங்கி வந்து புதுப்பாளையம் ஏரியில் உள்ள முட் புதருக்குள் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

மதுபாட்டில்கள் பறிமுதல்

அவ்வாறு பல்வேறு இடங்களில் வாங்கி வந்து மதுபாட்டில்களை அவரது சொந்த ஊரான வெள்ளக்கல்பட்டியில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் சவுந்திரராஜன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 பீர்பாட்டில்கள் உள்பட 314 மது பாட்டில்களையும், மதுபாட்டில்களை கடத்தி செல்ல பயன்படுத்திய மொபட்டையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்