< Back
மாநில செய்திகள்
டிடி பொதிகை தொலைக்காட்சியின் பெயர் மாற்றம்- எல்.முருகன் அறிவிப்பு
மாநில செய்திகள்

டிடி பொதிகை தொலைக்காட்சியின் பெயர் மாற்றம்- எல்.முருகன் அறிவிப்பு

தினத்தந்தி
|
10 Nov 2023 6:18 PM IST

டிடி பொதிகையில் மீண்டும் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை,

தூர்தர்ஷன் என்பது இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு பொது சேவை ஒளிபரப்பாகும். இது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கை குறித்து தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-

முன்பு அனைவரும் டிடி பொதிகை தொலைக்காட்சியில் ஒலியும் ஒளியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். தற்போது டிடி பொதிகையில் மீண்டும் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளோம்.

ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் முதல் டிடி பொதிகை என்பதை 'டிடி தமிழ்' என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்