< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
பிடாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
|15 Oct 2023 12:34 AM IST
பிடாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
பொன்னமராவதி தாலுகா கேசராபட்டியில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள வீட்டில் ராமர் பட்டாபிஷேக விழா நடைபெற்றது. இதையடுத்து பிடாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று. பின்பு கோவில் வளாகத்தில் மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 151 பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கேசராபட்டி ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.