< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில்காரில் கடத்தி வந்த 100 கிலோ குட்கா பறிமுதல்வாலிபர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில்காரில் கடத்தி வந்த 100 கிலோ குட்கா பறிமுதல்வாலிபர் கைது

தினத்தந்தி
|
11 July 2023 1:12 PM IST

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக 100 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக 100 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அவ்வழியே சென்ற கார்ஒன்றை மடக்கி நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர்.

அந்த காரில் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட 100 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களும், 65 மதுபாட்டில்களும் சிக்கியது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் குட்கா பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி வந்த ஈச்சங்காட்டு மேடு கிராமத்தை சேர்ந்த வாலிபர் சீனிவாசன் (வயது 35) என்பவரை கைது செய்தனர். மேலும் காருடன் குட்கா பொருட்களையும், மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்