நீலகிரி
கும்கி யானைகள் உதவியுடன் விரட்டும் பணி
|சேரம்பாடி அருகே காட்டு யானைகளை கும்கி யானைகள் உதவியுடன் விரட்டும் பணி நடந்தது.
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சால் சப்பந்தோடு கடந்த மாதம் காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி இறந்தார். இதையடுத்து மனித-வனவிலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஊருக்குள் நுழைவதை தடுக்கவும், காட்டு யானைகளை விரட்டவும் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் இருந்து விஜய், வசீம் என 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு சிங்கோனாவில் நிறுத்தப்பட்டு உள்ளது. கூடலூர் வன கோட்ட அலுவலர் ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்புசாமி ஆகியோர் உத்தரவின் படி, சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வன காப்பாளர்கள் வெள்ளிங்கிரி, ஞானமூர்த்தி, மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் காட்டு யானைகள் எந்த வனப்பகுதியில் உள்ளது என்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று சேரம்பாடி அருகே காப்பிகாடு, மண்டைசாமி கோவில் பகுதிகளில் காட்டு யானைகளை கும்கி யானைகள் உதவியுடன் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.