< Back
மாநில செய்திகள்
பெருவரப்பூர் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கடலூர்
மாநில செய்திகள்

பெருவரப்பூர் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
10 July 2023 12:19 AM IST

கம்மாபுரம் அருகே பெருவரப்பூர் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கம்மாபுரம்,

கம்மாபுரம் அடுத்த பெருவரப்பூர் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே அமைக்கப்பட்ட யாக சாலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள செல்லியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பெருவரப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்