< Back
மாநில செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்துக்கு கும்ப கலசங்கள்
நாமக்கல்
மாநில செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்துக்கு கும்ப கலசங்கள்

தினத்தந்தி
|
25 Jun 2022 5:59 PM GMT

சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்துக்கு கும்ப கலசங்கள் பரமத்திவேலூரில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

பரமத்திவேலூர்:

சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்துக்கு கும்ப கலசங்கள் பரமத்திவேலூரில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

சமயபுரம் மாரியம்மன் கோவில்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 108 அடி உயரம் கொண்ட கிழக்கு ராஜகோபுர திருக்குட நன்னீராட்டு விழா அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி நடக்கிறது. 7 நிலைகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த ராஜகோபுரத்துக்கு நேர்த்தி கடனாக 7 கோபுர கலசங்கள் வழங்கும் பணி பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையார் மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்தது.

இந்த கோபுர கலசங்களை நன்செய் இடையாரை சேர்ந்த அண்ணன்- தம்பியான பொன்னர், சங்கர் வழங்கி உள்ளனர். செம்பு உலோகத்தால் உருவாக்கப்பட்ட கலசங்கள் ஒவ்வொன்றும் சுமார் 4¾ அடி உயரம் கொண்டது. இந்த கலசங்கள் அனைத்திற்கும் நன்செய் இடையாறில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சிறப்பு பூஜைகள்

பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கலசங்கள் எடுத்து செல்லும் வாகனத்திற்கு மலர்தூவி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட இந்த வாகனம் பக்தர்கள் தரிசனத்திற்காக பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர் மலை, பரமத்தி, நாமக்கல், மோகனூர், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர், தொட்டியம் மற்றும் முசிறி வழியாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றடைகிறது.

மேலும் செய்திகள்