ராமநாதபுரம்
ஏழு முக காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
|திருவாடானை அருகே ஏழு முக காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
தொண்டி,
திருவாடானை தாலுகா கட்டவிளாகம் கிராமத்தில் பூரண புஷ்கலா சமேத கட்டாயிரமுடைய அய்யனார் ஏழுமுக காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் பாண்டுகுடி கணேச குருக்கள் தலைமையில் யாக வேள்விகள் நடைபெற்றது. நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து கட்டாயிரமுடைய அய்யனார், ஏழு முக காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலஸ்தான கும்பாபிஷேகம் சுவாமி, அம்மன் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அருட்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. வாணவேடிக்கை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கட்ட விளாகம் கிராம மக்கள், இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.